12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கான சூப்பர் வேலை! 803 காலிப் பணியிடங்கள் விண்ணப்பிக்கும் முழு வழிமுறை இதோ!.. NLC Apprentices Recruitment 2024:

12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கான சூப்பர் வேலை! 803 காலிப் பணியிடங்கள் விண்ணப்பிக்கும் முழு வழிமுறை இதோ!..

NLC Apprentices Recruitment 2024

NLC Apprentices Recruitment 2024: தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான பயிற்சி காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக இருக்கின்ற Trade Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இப்பணி குறித்த முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

NLC Apprentices Recruitment 2024
NLC Apprentices Recruitment 2024
பணியிட விவரங்கள்

Trade Apprentice ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பானது அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் மொத்தமாக 803 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பள விவரம்

Trade Apprentice பணியிடத்திற்கான   மாதம்   ரூ. 10,019 ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி விவரங்கள்

Trade Apprentice பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்  அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 2020/ 2021/ 2022/ 2023/ 2024 ஆம் ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மெடிக்கல் லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பில் உயிரியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரங்கள்

Trade Apprentice பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.

தேர்வு செய்யும் முறை 

Trade Apprentice பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க வேண்டிய தேதி

END  Date: 13/11/2024

விண்ணப்பிக்கும் முறை :

Trade Apprentice விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் .மேலும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் கட்டாயம் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

17.12.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்கள் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
Apply Form Link Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment