வியாழக்கிழமை நவம்பர் 7ஆம் தேதி தமிழகத்தில் உள்ளூர் விடுமுறை மகிழ்ச்சியில் மாணவர்கள்..
November 7 Local Holiday Thuthookudi
November 7 Local Holiday Thuthookudi: பொதுவாக ஒரு குறிப்பிட்ட இடங்களிலோ அல்லது மாவட்டத்திலோ நடைபெறுகின்ற திருவிழா நாட்களில் மக்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடுவதற்காக உள்ளூர் விடுமுறையானது அளிக்கப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தற்போது நவம்பர் 7ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கந்த சஷ்டி திருவிழாவானது நடைபெற உள்ளது. இந்த திருவிழாவினை கண்டுகளிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளியூர்களிலிருந்தும் மக்கள் வருவது வழக்கம்.
இதனால் அவர்களின் பாதுகாப்பு நலன் கருதி வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.