பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு!- நவம்பர் 15ஆம் தேதி காரணம் என்ன?..
November Local Holiday District List 2024
November Local Holiday District List 2024 : கடந்த அக்டோபர் மாதம் தொடர் விடுமுறை காரணமாக மாணவர்கள் மகிழ்ச்சியாக விடுமுறை நாட்களை கொண்டாடி வந்தனர். அந்த வகையில் இந்த நவம்பர் மாதமானது விடுமுறை கிடைக்குமா என மாணவர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் நவம்பர் மாதத்தில் விடுமுறை தினமே இல்லாத மாதமாக உள்ளது. அப்படி இருந்தும் சில மாவட்டங்களில் கோவில் திருவிழாக்கள் சிறப்பு பண்டிகைகள் காரணமாக அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையானது அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரு சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறையால் பள்ளி கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்களுக்கும் விடுமுறையானது அளிக்கப்பட்டுள்ளது. எனவே நவம்பர் மாதம் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்களை குறித்து இப்பதிவில் நாம் காணலாம்.
திருச்செந்தூர், திருவாரூர் விடுமுறை
சூரசம்ஹாரம் விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவான்னோடை தர்கா கந்தூரி விழா நவம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜாம்புவான்னோடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு வரும் 13ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் விடுமுறை
இந்தநிலையில் மற்றொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலங்கங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மயிலாடுதுறை ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் துலா உற்சவ முக்கிய திருவிழாவான கடைமுகத் தீர்த்தவாரி விழாவினை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு எதிர்வரும் 15.11.2024 (வெள்ளிக்கிழமை) அன்று உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 23ஆம் தேதி பணி நாள்
இவ்விடுமுறை தினத்தில் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். வகையில் மேலும் இந்த உள்ளுர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் 23.11.2024 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.