ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு முழு விவரம் இதோ!.. Ration Card Revision Special Camp Nov 9

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு முழு விவரம் இதோ!..

Ration Card Revision Special Camp Nov 9

Ration Card Revision Special Camp Nov 9: பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு உதவும் வகையில் ரேஷன் கார்டு மூலம் உணவு பொருட்களை மானிய விலையில் அரசு வழங்கி வருகிறது. மேலும், வெள்ள நிவாரணம், பொங்கல் பரிசு போன்ற பல்வேறு உதவித் தொகையை அந்தந்த மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது ரேஷன் கார்டு  குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Ration Card Revision Special Camp Nov 9
Ration Card Revision Special Camp Nov 9
அதாவது, தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் கோரி சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு தற்போது ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 வது மண்டல ஆணையர் அலுவலகங்களில் வருகின்ற நவம்பர் 9ம் தேதியன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை  மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றுதல், மொபைல் நம்பர் மாற்றுதல் போன்ற சேவைகள் மேற்கொள்ளபடுகிறது. மேலும், ரேஷன் கடைகளுக்கு சென்று உணவு பொருட்களை வாங்க முடியாத மூத்த குடிமக்களுக்கு “அங்கீகார சான்றிதழ்” வழங்கப்படும் என்றும் ஏதேனும் புகார்கள்  இருந்தால் தெரிவிக்கலாம் என்றும்  அறிவித்துள்ளது.

Leave a Comment